

WHO WE ARE
In the world of technology, when man's thoughts are reaching space for new activities, there is some part of the earth where a human being is struggling every day for survival. Our thoughts and actions are directed towards them. Established in 2020, the People Welfare Association Australia is a registered charity supporting socio-economic development locally and globally.
Aligned with integrated finance, collective responsibility, and public welfare policy, we collaborated with Northeast People Welfare Association, People Welfare Associations of Britain, Switzerland, and France to offer various types of assistance.
The funds provided by the Diaspora in the form of education, livelihood, medicine, elder assistance, and disaster assistance are carefully disbursed and projects are continuously monitored and documented.
This humanitarian work is carried out in 8 districts of Sri-Lanka such as Kilinochchi, Mullaitivu, Vavuniya, Batticaloa, Ampara, Trincomalee, Jaffna and Mannar. Additionally, aid is extended to the up country of Sri Lanka. We humbly thank all the donors, volunteers and administrators who continue to travel in this service and cordially invite you to travel with us.
“Let's lend a hand and protect the welfare of the people”
விஞ்ஞான உலகில் மனிதனின் சிந்தனைகள் விண்ணை நோக்கி செல்கின்ற பொழுது பூமியில் எதோ ஒரு பகுதியில், ஒரு மனித உயிர் வாழ்வதற்காக தினமும் போராடிக்கொண்டு இருக்கின்றது. எமது சிந்தனைகளும் செயல்களும் இவர்களை நோக்கியே பயணிக்கின்றது. தாயகத்தில் வாழும் எமது உறவுகளின் தன்னிறைவான சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக ஆஸ்திரேலிய மக்கள் நலன் காப்பகம் 2020 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு இந்நாட்டு சட்டதிற்கமைய தொண்டுநிறுவனமாக பதிவு செய்யப்பட்டு சேவையாற்றிவருகின்றது.
ஒருங்கிணைந்த நிதி, கூட்டு பொறுப்பு, பொது நலக்கொள்கை எனும் தன்மையில், தாயகத்தில் ஏலவே இயங்கிவருகின்ற வட, கிழக்கு மக்கள் நலன் காப்பகத்துடனும் பிரித்தானியா, சுவிற்சர்லாந்து,பிரான்ஸ் ஆகிய நாடுகளின் மக்கள் நலன் காப்பகங்களுடன் இணைந்தும் பல்வேறு பட்ட உதவிகள் செய்யப்படுவருகின்றது.
கல்வி, வாழ்வாதாரம்,மருத்துவம் ,மூதாளர் உதவி,மற்றும் அனர்த்த உதவிகள் என புலம்பெயர் உறவுகள் தரும் நிதிகள் மிகவும் கவனமான முறையில் வழங்கப்படுவதுடன் திட்டங்கள் தொடர் கண்காணிப்பு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்படுகின்றது.
மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலையாழ்ப்பாணம்,மன்னார்,கிளிநொச்சி,முல்லைத்தீவு,வவுனியா ஆகிய 8 மாவட்டங்களிலும் மலையகப்பகுதியிலும் இம் மனிதநேயப் பணி நடைபெறுகின்றது. இச்சேவையில் தொடர்ந்து பயணித்துவரும் கொடையாளர்கள் ,தொண்டர்கள் நிர்வாகிகள் அனைவரையும் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை எங்களுடன் இணைந்து பயணிக்க உங்களையும் அன்புடன் அழைக்கின்றோம் .
"ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்,அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்" [குறள்]
"கரம் கொடுப்போம் மக்கள் நலன் காப்போம்"
Work With Us!
People Welfare Association Australia
Get in touch so we can start working together.