
அன்புடன் அனைவருக்கும் வணக்கம்1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் நிலவிய யுத்ததிலைகாரணமாக மக்கள், கனகர்கிராமத்தை விட்டு வெளியேறினர் எனினும் பல்வேறு வகையான போராட்டங்களின் பின்ஏறத்தாழ மூன்று தசாப்தங்களின் பின் கனகர் கிராமத்தின் ஒரு பகுதியில் குடியமர 73 குடும்பங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
மக்கள்குடியமரஅனுமதிக்கப்பட்டாலும் தூயகுடிநீர்இன்மை,காட்டுயானைகளின் அச்சுறுத்தல்,மக்களின் பொருளாதாரபிரச்சனை காரணமாக மிகமிக மந்த கதியிலே மக்கள் தற்காலிக கொட்டகைகளில் குடியேறினர். இருப்பினும் இவர்கள்குடிநீரைப்பெற பல கிலோமீற்றர் அப்பால் உள்ள கிராமங்களுக்கே செல்லவேண்டியிருந்தது. மேற்படி கிராம மக்களின் குடிநீர்ப்பிரச்சனையை தீர்க்கும் முகமாக குமுகாய மேம்பாட்டுக் கழகம் -கிழக்கு(SAFE) இன் முயற்சியால் திட்ட மிடப்பட்ட3மில்லியன் ரூபா செலவிலானகுழாய் கிணற்றுடன் நீர்த்தாங்கி அமைக்கும் பணியினை தனிநபர்களுடன் , மக்கள் நலன் காப்பகம் -அவுஸ்திரேலிய அமைப்பும் மேற்கொண்டது.
இத்திட்டம் 15/01/2026 அன்று நிறைவு பெற்று கிராம மக்களிடம் கையளிக்கப்பட்டது .கனகர் கிராம மக்கள் அமைப்பின் தலைவர் தலைமையில் நடைபெற்றஇந்நிகழ்வில் குமுகாய மேம்பாட்டு மன்றம்-கிழக்கு(SAFE) அமைப்பின்தலைவர் சி.தேவசிங்கன் ,SAFE அமைப்பின் அங்கத்தவர்கள்,மக்கள் நலன் காப்பகம் -அவுஸ்திரேலிய அமைப்பின் சிட்னி இணைப்பாளரும்மட்டக்களப்பு EDS அமைப்பின் பழைய மாணவரும்மான பேரின்பம் முகுந்தனுடன் , வட, கிழக்கு மக்கள் நலன் காப்பக இணைப்பாளர் இரத்தினம் விஜயானந்தன், வட கிழக்கு மக்கள் நலன் காப்பக அம்பாறை மாவடட இணைப்பாளர் திரு வீரமணி,இலங்கை தமிழரசுக்கட்சியின் தேசிய இளைஞர் அணியின்தலைவருமானகிருஷ்னபிள்ளைசேயோன்மற்றும்கனகர்கிராமமக்களும்கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில்மக்களுக்கானகுடிநீர்வினயோகத்தைபேரின்பம்முகுந்தன் ஆரம்பித்து வைத்தார். அவுஸ்திரேலியா மக்கள் நலன் காப்பகம் 04/10/2025 “சிறகுகள்” நிகழ்ச்சி ஊடாக சேகரித்த நிதியில் 2.3 மில்லியன் இலங்கை ரூபாவை வழங்கியது. இதன் மூலம் நீர்த்தாங்கி அமைக்கப்பெற்று சூரிய மின்கல மோட்டார் பொருத்தி திட்டம் சிறப்புற நிறைவு படுத்தப்பட்டது. இந்நிதியினை வழங்கிய ஆஸ்திரேலியா தமிழ் உறவுகளுக்கும் திட்டத்தை நிறைவேற்றிய தாயக உறவுகளுக்கும் அவுஸ்திரேலியா மக்கள் நலன் காப்பகம் மற்றும் அனைத்து நாடுகளின் மக்கள் நலன் காப்பக நிர்வாகங்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி,
“ கரம் கொடுப்போம், மக்கள் நலன் காப்போம் “
தொடர்புகளுக்கு:- 0094 777548603 +44 7868 99 9014 -+33652202168 +49 1521 4720724 - 0041789261884 +61 470 588911 - +1(682)812-4782,







